• May 23 2025

வைத்தியசாலையில் விபரீத முடிவெடுத்து உயிரைமாய்த்த நோயாளி

Chithra / May 23rd 2025, 8:07 am
image

 

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் 23வது விடுதியில் 05 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மதியம் பழங்களை வெட்டுவதற்காக தன்னிடம் வைத்திருந்த சிறிய கத்தியால் தனது மார்பில் காயப்படுத்தி உயிரிழந்துள்ளார்.

அவரது நோயால் ஏற்பட்ட வலி காரணமாக அவர் உயிர்மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

வைத்தியசாலையில் விபரீத முடிவெடுத்து உயிரைமாய்த்த நோயாளி  பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு உயிரிழந்துள்ளார்.கடந்த 18 ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் 23வது விடுதியில் 05 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மதியம் பழங்களை வெட்டுவதற்காக தன்னிடம் வைத்திருந்த சிறிய கத்தியால் தனது மார்பில் காயப்படுத்தி உயிரிழந்துள்ளார்.அவரது நோயால் ஏற்பட்ட வலி காரணமாக அவர் உயிர்மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement