திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட சித்திரை புத்தாண்டு நிகழ்வு இன்றையதினம் (30) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சிங்கள, தமிழ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ சமயங்களின் கலை கலாசார நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.
மேலும், பாடசாலை மாணவர்களாலும் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையணை அடி, யானைக்கு கண் வைத்தல், தொப்பிகளை மாற்றுதல், தேசிக்காய் கரண்டி ஓட்டம், பப்பாளி விதைகளை எண்ணுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமலை மாவட்ட செயலகத்தில் களைகட்டிய புத்தாண்டு நிகழ்வு. திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட சித்திரை புத்தாண்டு நிகழ்வு இன்றையதினம் (30) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சிங்கள, தமிழ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ சமயங்களின் கலை கலாசார நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.மேலும், பாடசாலை மாணவர்களாலும் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையணை அடி, யானைக்கு கண் வைத்தல், தொப்பிகளை மாற்றுதல், தேசிக்காய் கரண்டி ஓட்டம், பப்பாளி விதைகளை எண்ணுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.