• Mar 26 2026

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் உயிரிழப்பு!

shanu / Mar 25th 2026, 11:19 pm
image

யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 


யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனகதாசன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரிய வருகையில்,


இவர் கடந்த 18 ஆம் திகதி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். 


இதன்போது வலது பக்கம் திரும்புவதற்காக மத்திய கோட்டை நோக்கி சென்றவேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.  


குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 


யாழில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் உயிரிழப்பு யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனகதாசன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,இவர் கடந்த 18 ஆம் திகதி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது வலது பக்கம் திரும்புவதற்காக மத்திய கோட்டை நோக்கி சென்றவேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.  குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

Advertisement

Advertisement

Advertisement