• May 12 2025

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பஸ் விபத்து!

Chithra / May 11th 2025, 2:29 pm
image


அநுராதபுரம் வீதி - சாலியவெவ 18 ஆம் இலக்க மைல் கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றும், எதிர்த் திசையில் வந்த லொறி ஒன்றும் மோதி இந்தப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட பலர் காயமடைந்த நிலையில் சிலாபம் மற்றும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணைகளைச் சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பஸ் விபத்து அநுராதபுரம் வீதி - சாலியவெவ 18 ஆம் இலக்க மைல் கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றும், எதிர்த் திசையில் வந்த லொறி ஒன்றும் மோதி இந்தப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட பலர் காயமடைந்த நிலையில் சிலாபம் மற்றும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.மேலதிக விசாரணைகளைச் சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement