• Apr 15 2026

கொட்டகலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி !

Ziya / Apr 15th 2026, 12:40 pm
image

மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி முதலாவது முறையாக தலைவர் கிண்ணம் 2026 என்ற நாமத்தில் கொட்டகலை பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 11.தொடக்கம் 13 வரை இடம்பெற்றது. 


கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் கொட்டகலை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட 10 வட்டாரங்களில் இருந்து 4 அணிகள் என்ற அடிப்படையில் 40 அணிகளுக்கிடையில் இப்போட்டி  இடம்பெற்றுள்ளது.


இப்போட்டி தொடரில் அரையிறுதி சுற்றுக்கு குடாகம லயன்ஸ் ஸ்டார், கொட்டகலை ஊட்டன், கூம்வுட் உதிரம் மற்றும் கிரேட்வெஸ்டர்ன் ஆஷேஸ் போன்ற அணிகள் தெரிவு செய்யப்பட்டு இறுதி சுற்றுக்கு  குடாகம லயன்ஸ் ஸ்டார் மற்றும் கொட்டகலை வூட்டன் போன்ற அணிகள் தெரிவு செய்யப்பட்டு வெற்றி வாகையினை கொட்டகலை வூட்டன் அணியினர் தன்வசப்படுத்தி கொண்டனர் தொடர்ந்து இரண்டாம் இடத்தினை குடாகம லயன்ஸ் ஸ்டார் கையகப்படுத்தி கொண்டது.


தலைவர் கிண்ணத்தினை பெற்றுக் கொண்ட கொட்டகலை வூட்டன் அணியினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசில் தலைவர் ராஜமணி பிரசாந்த்  வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொண்ட அணியினருக்கு ஒரு லட்சம் பெறுமதியான பணப்பரிசலினை பிரதேச சபையின் உறுப்பினர் லெட்சுமன் விஸ்வநாதன் வழங்கி வைத்தார். 


இப்போட்டி நிகழ்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பினை கொட்டகலை பிரதேச சபையின்  உறுப்பினர்கள் பெற்று தந்தார்கள் என்பதுடன் மேலும் இவ் நிகழ்ச்சியில் பிரதேச சபையின்  உப தலைவர்,  உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.  

கொட்டகலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி முதலாவது முறையாக தலைவர் கிண்ணம் 2026 என்ற நாமத்தில் கொட்டகலை பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 11.தொடக்கம் 13 வரை இடம்பெற்றது. கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் கொட்டகலை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட 10 வட்டாரங்களில் இருந்து 4 அணிகள் என்ற அடிப்படையில் 40 அணிகளுக்கிடையில் இப்போட்டி  இடம்பெற்றுள்ளது.இப்போட்டி தொடரில் அரையிறுதி சுற்றுக்கு குடாகம லயன்ஸ் ஸ்டார், கொட்டகலை ஊட்டன், கூம்வுட் உதிரம் மற்றும் கிரேட்வெஸ்டர்ன் ஆஷேஸ் போன்ற அணிகள் தெரிவு செய்யப்பட்டு இறுதி சுற்றுக்கு  குடாகம லயன்ஸ் ஸ்டார் மற்றும் கொட்டகலை வூட்டன் போன்ற அணிகள் தெரிவு செய்யப்பட்டு வெற்றி வாகையினை கொட்டகலை வூட்டன் அணியினர் தன்வசப்படுத்தி கொண்டனர் தொடர்ந்து இரண்டாம் இடத்தினை குடாகம லயன்ஸ் ஸ்டார் கையகப்படுத்தி கொண்டது.தலைவர் கிண்ணத்தினை பெற்றுக் கொண்ட கொட்டகலை வூட்டன் அணியினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசில் தலைவர் ராஜமணி பிரசாந்த்  வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொண்ட அணியினருக்கு ஒரு லட்சம் பெறுமதியான பணப்பரிசலினை பிரதேச சபையின் உறுப்பினர் லெட்சுமன் விஸ்வநாதன் வழங்கி வைத்தார். இப்போட்டி நிகழ்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பினை கொட்டகலை பிரதேச சபையின்  உறுப்பினர்கள் பெற்று தந்தார்கள் என்பதுடன் மேலும் இவ் நிகழ்ச்சியில் பிரதேச சபையின்  உப தலைவர்,  உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.  

Advertisement

Advertisement

Advertisement