• Oct 19 2026

அரச பேருந்து சேவைகள் முறையாக இல்லை பயணிகள் அவதி!

Ziya / Oct 19th 2026, 5:11 pm
image

மஸ்கெலியா நகரில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு தலைநகர் கொழும்பு கொழும்பு செல்லும் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து சேவைகள் கடந்த சில மாதங்களாக சேவையில் இல்லாத காரணத்தால் மஸ்கெலியா நல்லதண்ணி சாமிமலை பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


மேலும் அதிகாலை வேளையில் ஹட்டன் நகரில் இருந்து ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான காலை 6 மணிக்கு சாமி மலை நோக்கி சென்று காலை 8 மணிக்கு சாமிலை நகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அந்த பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் செய்ய பட்டு உள்ளது.


இந்த இரண்டு அரச பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் செய்ய பட்டு உள்ளதால் அதிகாலை வேளையில் தங்களது கடமைகளுக்கு  அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் மாணவர்கள் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.


தலைநகர் கொழும்பு செல்லும் பயணிகள் மற்றும் அரச சேவைக்காக செல்ல வேண்டிய மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது சேவையில் ஈடுபடுத்த பட்ட பேருந்து இயந்திரம் முழுமையாக செயல் இழந்து உள்ளது அந்த நிலையில் அந்த பேருந்துக்கு புதிய இயந்திரம் வைக்க வேண்டும் ஆகையால் இன்னும் ஒரு சில காலம் அந்த பேருந்து சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் எமது பேருந்து நிலையத்தில் 103 சாலையில் 70 பேருந்துகள் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபடுத்த முடியும் ஏனைய 33 சேவைகள் பாரிய பின்னடைவை சந்தித்து உள்ளது காரணம் எமது பேருந்து நிலையத்திற்கு புதிய பேருந்துகள் குறைந்த பட்சம் 30 தேவை தற்போது உள்ள அனைத்து பேருந்துகளும் மிகவும் பழமையானது நாளாந்தம் பேருந்துகளை திருத்தம் செய்து கொண்டு தான் 70 சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.


மேலும் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரி இடம் மஸ்கெலியா நகரில் இருந்து அதிகாலை வேளையில் செல்லும் பேருந்து பற்றி கேட்டபோது அவர் சேவையில் ஈடுபடுத்த பட்ட பேருந்து சீர் திருத்த வேண்டிய நிலையில் உள்ளது அதற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் எம்மிடம் சேவையில் ஈடுபடுத்த மேலதிக பேருந்து இல்லை எமது பேருந்து சேவைகள் முறையாக செயல் பட புதிய பேருந்து 80 தேவை எம்மிடம் உள்ள பேருந்துகளை கொண்டு தற்போது எம்மால் முடிந்த அளவு மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.


மேலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அரச பேருந்து சேவைகள் முறையாக இல்லாத நிலையில் ஹட்டன் நுவரெலியா தனியார் சொகுசு பேருந்து சேவைகள் என கூறி 26 பேர் பயணம் செய்யும் பேருந்துகளில் ஐம்பது அல்லது நாற்பது பயணிகளை ஏற்றிக்கொண்டு ரதல்ல குறுக்கு வழியில் செல்லும் போது ஏதேனும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பயணிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம்.


சொகுசு பேருந்து சேவைகள் என கூறி 350/= ரூபாய் கட்டணம் செலுத்தி அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதுடன் குளிரூட்டப்பட்ட சேவைகள் என்ற அடிப்படையில் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் பயணிகள் பாரிய அளவில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து மத்திய மாகாண தனியார் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு ஹட்டன் பத்தனை தலவாக்கலை லிந்துல்ல நானுஓயா மற்றும் நுவரெலியா போக்குவரத்து பொலிசார் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிக்கொண்டு செல்லும் ஹட்டன் நுவரெலியா சொகுசு பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அத்துடன் மஸ்கெலியா நகரில் இருந்து தனியார் பேருந்து சேவைகள் தலைநகர் கொழும்பு நோக்கியும் சாமி மலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் தலைநகர் கொழும்பு நோக்கியும் ஆரம்பிக்க வேண்டும் அத்துடன் ஹட்டன் நுவரெலியாவிற்க்கு மெட்ரோ பேருந்து சேவைகள் அடிக்கடி இடம் பெற போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன் வர வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அரச பேருந்து சேவைகள் முறையாக இல்லை பயணிகள் அவதி மஸ்கெலியா நகரில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு தலைநகர் கொழும்பு கொழும்பு செல்லும் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து சேவைகள் கடந்த சில மாதங்களாக சேவையில் இல்லாத காரணத்தால் மஸ்கெலியா நல்லதண்ணி சாமிமலை பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.மேலும் அதிகாலை வேளையில் ஹட்டன் நகரில் இருந்து ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான காலை 6 மணிக்கு சாமி மலை நோக்கி சென்று காலை 8 மணிக்கு சாமிலை நகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அந்த பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் செய்ய பட்டு உள்ளது.இந்த இரண்டு அரச பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் செய்ய பட்டு உள்ளதால் அதிகாலை வேளையில் தங்களது கடமைகளுக்கு  அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் மாணவர்கள் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.தலைநகர் கொழும்பு செல்லும் பயணிகள் மற்றும் அரச சேவைக்காக செல்ல வேண்டிய மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது சேவையில் ஈடுபடுத்த பட்ட பேருந்து இயந்திரம் முழுமையாக செயல் இழந்து உள்ளது அந்த நிலையில் அந்த பேருந்துக்கு புதிய இயந்திரம் வைக்க வேண்டும் ஆகையால் இன்னும் ஒரு சில காலம் அந்த பேருந்து சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் எமது பேருந்து நிலையத்தில் 103 சாலையில் 70 பேருந்துகள் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபடுத்த முடியும் ஏனைய 33 சேவைகள் பாரிய பின்னடைவை சந்தித்து உள்ளது காரணம் எமது பேருந்து நிலையத்திற்கு புதிய பேருந்துகள் குறைந்த பட்சம் 30 தேவை தற்போது உள்ள அனைத்து பேருந்துகளும் மிகவும் பழமையானது நாளாந்தம் பேருந்துகளை திருத்தம் செய்து கொண்டு தான் 70 சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.மேலும் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரி இடம் மஸ்கெலியா நகரில் இருந்து அதிகாலை வேளையில் செல்லும் பேருந்து பற்றி கேட்டபோது அவர் சேவையில் ஈடுபடுத்த பட்ட பேருந்து சீர் திருத்த வேண்டிய நிலையில் உள்ளது அதற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் எம்மிடம் சேவையில் ஈடுபடுத்த மேலதிக பேருந்து இல்லை எமது பேருந்து சேவைகள் முறையாக செயல் பட புதிய பேருந்து 80 தேவை எம்மிடம் உள்ள பேருந்துகளை கொண்டு தற்போது எம்மால் முடிந்த அளவு மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.மேலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அரச பேருந்து சேவைகள் முறையாக இல்லாத நிலையில் ஹட்டன் நுவரெலியா தனியார் சொகுசு பேருந்து சேவைகள் என கூறி 26 பேர் பயணம் செய்யும் பேருந்துகளில் ஐம்பது அல்லது நாற்பது பயணிகளை ஏற்றிக்கொண்டு ரதல்ல குறுக்கு வழியில் செல்லும் போது ஏதேனும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பயணிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம்.சொகுசு பேருந்து சேவைகள் என கூறி 350/= ரூபாய் கட்டணம் செலுத்தி அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதுடன் குளிரூட்டப்பட்ட சேவைகள் என்ற அடிப்படையில் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் பயணிகள் பாரிய அளவில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து மத்திய மாகாண தனியார் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு ஹட்டன் பத்தனை தலவாக்கலை லிந்துல்ல நானுஓயா மற்றும் நுவரெலியா போக்குவரத்து பொலிசார் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிக்கொண்டு செல்லும் ஹட்டன் நுவரெலியா சொகுசு பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் மஸ்கெலியா நகரில் இருந்து தனியார் பேருந்து சேவைகள் தலைநகர் கொழும்பு நோக்கியும் சாமி மலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் தலைநகர் கொழும்பு நோக்கியும் ஆரம்பிக்க வேண்டும் அத்துடன் ஹட்டன் நுவரெலியாவிற்க்கு மெட்ரோ பேருந்து சேவைகள் அடிக்கடி இடம் பெற போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன் வர வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement