• Oct 20 2026

உங்கள் கைப்பேசிக்கு இப்படியொரு தகவல் வந்ததா? ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எச்சரிக்கை!

Chithra / Oct 19th 2026, 1:18 pm
image


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அந்த நிறுவனம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.


விமான நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலியான கைப்பேசிச் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, வட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்களில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.


அத்துடன், வங்கிக் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி அட்டைகளின் இரகசிய இலக்கங்கள் (PIN) மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்களை எக்காரணம் கொண்டும் அடையாளம் தெரியாத நபர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிகாரபூர்வ கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, Apple App Store அல்லது Google Play Store போன்ற அங்கீகரிக்கப்பட்ட தளங்களை மாத்திரமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தல் மற்றும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை மாத்திரம் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் அல்லது தகவல்கள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான போலியான இணையத்தளங்கள், கைப்பேசிச் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் இடம்பெறும் மோசடிகளில் சிக்காமல், பொதுமக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கைப்பேசிக்கு இப்படியொரு தகவல் வந்ததா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எச்சரிக்கை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அந்த நிறுவனம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.விமான நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலியான கைப்பேசிச் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, வட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்களில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.அத்துடன், வங்கிக் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி அட்டைகளின் இரகசிய இலக்கங்கள் (PIN) மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்களை எக்காரணம் கொண்டும் அடையாளம் தெரியாத நபர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிகாரபூர்வ கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, Apple App Store அல்லது Google Play Store போன்ற அங்கீகரிக்கப்பட்ட தளங்களை மாத்திரமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தல் மற்றும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை மாத்திரம் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் அல்லது தகவல்கள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான போலியான இணையத்தளங்கள், கைப்பேசிச் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் இடம்பெறும் மோசடிகளில் சிக்காமல், பொதுமக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement