• Oct 19 2026

31 நாட்கள் துவிச்சக்கரப் பயணம் மேற்கொள்ளும் முதியோர்களுக்கு கௌரவிப்பு!

Ziya / Oct 19th 2026, 5:20 pm
image


இலங்கையின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், 31 நாட்களை இலக்காகக் கொண்டு துவிச்சக்கரப் பயணத்தை மேற்கொண்டு வரும் முதியோர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வும்,காலை உணவு பரிமாறலும் இன்று (19.10.2026) காலை திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகப் பிரதேச  இடம்பெற்றது.


இந்நிகழ்வில், வெருகல் பிரதேச செயலாளர் , மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் முதியோர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்  அவர்களால் பயணத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு முதியோருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவர்களின் முயற்சி கௌரவிக்கப்பட்டது.


மேலும், முதியோர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சேவைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1890 என்ற தொலைபேசி இலக்கம் தொடர்பான தகவல்களும் முதியோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலத்திற்கு உட்பட்ட  முதியோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்தனர். 

31 நாட்கள் துவிச்சக்கரப் பயணம் மேற்கொள்ளும் முதியோர்களுக்கு கௌரவிப்பு இலங்கையின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், 31 நாட்களை இலக்காகக் கொண்டு துவிச்சக்கரப் பயணத்தை மேற்கொண்டு வரும் முதியோர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வும்,காலை உணவு பரிமாறலும் இன்று (19.10.2026) காலை திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகப் பிரதேச  இடம்பெற்றது.இந்நிகழ்வில், வெருகல் பிரதேச செயலாளர் , மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் முதியோர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்  அவர்களால் பயணத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு முதியோருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவர்களின் முயற்சி கௌரவிக்கப்பட்டது.மேலும், முதியோர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சேவைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1890 என்ற தொலைபேசி இலக்கம் தொடர்பான தகவல்களும் முதியோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலத்திற்கு உட்பட்ட  முதியோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement