சீனாக்கொல்லை டிவிசனின் பாதை செப்பனிட ஒதுக்கப்பட்ட நிதி பிரதேச சபைத் தலைவரின் பொறுப்பற்ற செயலால் இழக்கப்பட்டுள்ளது.
அதை மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டம் சீனாக்கொல்லை பூசாரி டிவிசனுக்கு பாதை அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியானது ஆட்சி மாற்றத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
மீண்டும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 30 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நோர்வூட் பிரதேச சபைக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டு,இந்த வேலைத் திட்டத்துக்கு பிரதேச சபையின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய பிரதேச சபைத் தலைவர் இப்பாதையை பார்வையிட்டு, பாதை நல்ல நிலையில் உள்ளதாகவும் அதை சீரமைக்க வேண்டிய தேவையில்லை எனவும் பிரதேச செயலகத்துக்கு கடந்த மூலம் அறிவித்துள்ளார்.
உண்மையில் இப்பாதை சேதமடைந்து குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது. அதனால் தான் மக்கள் கடந்த காலங்களில் இந்தப் பாதையை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்கள்.
ஆகவே, பாதையை செப்பனிடத் தேவையில்லை என்று பிரதேச சபைத் தலைவர் கடிதம் எழுதியுள்ளமை உண்மைக்குப் புறம்பானதும் அரசியல் காழ்ப்புணர்வு மிக்கதுமான விடயமாகும்.
அத்தோடு, பிரதேச சபைத் தலைவர் இவ்விடத்துக்கு வந்து பாதையைப் பார்வையிட வரும்போது, வட்டார உறுப்பினர் என்ற வகையில் எனக்கும் அறிவித்திருக்க வேண்டும் அல்லது மக்களிடம் விசாரித்து முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை: இது சம்பந்தமாக இரண்டொரு தினங்களுக்கு முன்னரே எனக்குத் தெரிய வந்துள்ளது.
ஆகவே இந்த வட்டாரத்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்ற வகையில் இது தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் இவ் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வலியுறுத்தி நிதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.
பாதை செப்பனிடுவதற்கு மீண்டும் நிதி பெற்றுக் கொடுக்கப்படும்-நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் குழந்தைவேல் ரவி சீனாக்கொல்லை டிவிசனின் பாதை செப்பனிட ஒதுக்கப்பட்ட நிதி பிரதேச சபைத் தலைவரின் பொறுப்பற்ற செயலால் இழக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டம் சீனாக்கொல்லை பூசாரி டிவிசனுக்கு பாதை அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியானது ஆட்சி மாற்றத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.மீண்டும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 30 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோர்வூட் பிரதேச சபைக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டு,இந்த வேலைத் திட்டத்துக்கு பிரதேச சபையின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய பிரதேச சபைத் தலைவர் இப்பாதையை பார்வையிட்டு, பாதை நல்ல நிலையில் உள்ளதாகவும் அதை சீரமைக்க வேண்டிய தேவையில்லை எனவும் பிரதேச செயலகத்துக்கு கடந்த மூலம் அறிவித்துள்ளார். உண்மையில் இப்பாதை சேதமடைந்து குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது. அதனால் தான் மக்கள் கடந்த காலங்களில் இந்தப் பாதையை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்கள்.ஆகவே, பாதையை செப்பனிடத் தேவையில்லை என்று பிரதேச சபைத் தலைவர் கடிதம் எழுதியுள்ளமை உண்மைக்குப் புறம்பானதும் அரசியல் காழ்ப்புணர்வு மிக்கதுமான விடயமாகும். அத்தோடு, பிரதேச சபைத் தலைவர் இவ்விடத்துக்கு வந்து பாதையைப் பார்வையிட வரும்போது, வட்டார உறுப்பினர் என்ற வகையில் எனக்கும் அறிவித்திருக்க வேண்டும் அல்லது மக்களிடம் விசாரித்து முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை: இது சம்பந்தமாக இரண்டொரு தினங்களுக்கு முன்னரே எனக்குத் தெரிய வந்துள்ளது.ஆகவே இந்த வட்டாரத்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்ற வகையில் இது தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் இவ் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வலியுறுத்தி நிதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.