ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பாடசாலை விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபோது,
கிராமத்திற்கு வந்த ஒரு காட்டு யானை அவர்கள் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள கிவ் தோட்ட கீழ் பிரிவில் 8 வயது உடைய சிறுவன் கழிவுநீர் நீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கியதில் சிறுமி சாவு; கழிவுநீர் குழியில் விழுந்து சிறுவன் பலி இலங்கையில் நடந்த துயரம் ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பாடசாலை விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபோது, கிராமத்திற்கு வந்த ஒரு காட்டு யானை அவர்கள் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள கிவ் தோட்ட கீழ் பிரிவில் 8 வயது உடைய சிறுவன் கழிவுநீர் நீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.சிறுவனின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.