இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட அணிகளும், இராணுவத்தின் இரு அணிகளும் உள்ளடங்கலாக ஏழு அணிகள் கலந்து கொள்ளும் சுற்றுப்போட்டி, இன்றைய தினம் ஆரம்பமானது.
இராணுவத்தின் 542வது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் ஏ.ஆர்.சி.அசூர சிங்க தலைமையில் குறித்த போட்டி ஆரம்பமானது.
குறித்த விளையாட்டு நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அதிகாரி,மன்னார் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக இடம் பெறும் குறித்த போட்டியின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 4-06-2025 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இராணவத்திற்கும் பொதுமக்களிற்கும் இடையில் -மன்னாரில் ஆரம்பமான கரப்பந்தாட்ட போட்டி. இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட அணிகளும், இராணுவத்தின் இரு அணிகளும் உள்ளடங்கலாக ஏழு அணிகள் கலந்து கொள்ளும் சுற்றுப்போட்டி, இன்றைய தினம் ஆரம்பமானது.இராணுவத்தின் 542வது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் ஏ.ஆர்.சி.அசூர சிங்க தலைமையில் குறித்த போட்டி ஆரம்பமானது.குறித்த விளையாட்டு நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அதிகாரி,மன்னார் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.தொடர்ச்சியாக இடம் பெறும் குறித்த போட்டியின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 4-06-2025 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.