அம்பலாங்கொடை பகுதியில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரே இன்று காலை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது மரணத்திற்கு மன உளைச்சல் தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களில் இலங்கையில் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
முதல் சம்பவம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பதிவானது. அங்கு இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தினால் கல்லூரி விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட 13 வயது மாணவன் பெற்றோர் கூறிய காரணம் அம்பலாங்கொடை பகுதியில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரே இன்று காலை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது மரணத்திற்கு மன உளைச்சல் தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில வாரங்களில் இலங்கையில் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. முதல் சம்பவம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பதிவானது. அங்கு இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தினால் கல்லூரி விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.