யாழ்ப்பாணம் - வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய 62 வயதுடைய நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கடந்த சனிக்கிழமை துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றுள்ளார்.
கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் 'ஜூஸ்' எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதையடுத்து பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்துள்ளார்.
முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கிய தாயார், பின்னர் சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,
24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று பிற்பகல் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது யாழ்ப்பாணம் - வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய 62 வயதுடைய நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த சனிக்கிழமை துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றுள்ளார்.கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் 'ஜூஸ்' எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையடுத்து பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்துள்ளார்.முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கிய தாயார், பின்னர் சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று பிற்பகல் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.