• Jun 01 2026

ஆபத்தான சாகசம் செய்த 6 இளைஞர்கள் கைது - போதைப்பொருள் பாவித்தமை உறுதி!

Chithra / May 31st 2026, 12:45 pm
image

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 6 இளைஞர்கள் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று (30) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் சாரதிகளை அச்சுறுத்தும் வகையிலும் இளைஞர்கள் வாகனங்களை இயக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறிப்பாக, வாகனங்களின் முன்சக்கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தியவாறும் பெரும் சத்தம் எழுப்பியவாறும் பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்டவர்கள் கந்தானை – படகம பகுதியைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரில் 4 பேரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாததுடன், அவர்கள் பயன்படுத்திய எந்தவொரு வாகனத்திலும் இலக்கத் தகடுகள் பொருத்தப்படவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்கள்  ராகம சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டபோது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


ஆபத்தான சாகசம் செய்த 6 இளைஞர்கள் கைது - போதைப்பொருள் பாவித்தமை உறுதி கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 6 இளைஞர்கள் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (30) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் சாரதிகளை அச்சுறுத்தும் வகையிலும் இளைஞர்கள் வாகனங்களை இயக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறிப்பாக, வாகனங்களின் முன்சக்கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தியவாறும் பெரும் சத்தம் எழுப்பியவாறும் பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டவர்கள் கந்தானை – படகம பகுதியைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரில் 4 பேரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாததுடன், அவர்கள் பயன்படுத்திய எந்தவொரு வாகனத்திலும் இலக்கத் தகடுகள் பொருத்தப்படவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள்  ராகம சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டபோது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement