• Sep 08 2026

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் 31 மூடல் – நாடாளுமன்றத்தில் தகவல்

Chithra / Sep 8th 2026, 12:56 pm
image


2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சனக மதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதி அமைச்சர் இன்று (08) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.


அதன்படி, 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி நிலவரப்படி நாடு முழுவதும் 424 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது லங்கா சதொச நிறுவனம் 24 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டிருந்ததாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அந்த காலப்பகுதியில் நிறுவனத்துக்கு 11 பில்லியன் ரூபாய் கடனும், 5 பில்லியன் ரூபாய் வங்கி மேலதிகப் பற்று வசதியும் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் 31 மூடல் – நாடாளுமன்றத்தில் தகவல் 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சனக மதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதி அமைச்சர் இன்று (08) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி, 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி நிலவரப்படி நாடு முழுவதும் 424 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது லங்கா சதொச நிறுவனம் 24 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டிருந்ததாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அந்த காலப்பகுதியில் நிறுவனத்துக்கு 11 பில்லியன் ரூபாய் கடனும், 5 பில்லியன் ரூபாய் வங்கி மேலதிகப் பற்று வசதியும் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement