நவராத்திரி விரதத்தின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள ஆலயங்கள், பாடசாலைகளில் விசேட பூஜை வழிபாடுகளும் சிறுவர்களுக்கான ஏடு தொடக்குதல் நிகழ்வுகளும் இன்று (20) சிறப்பாக இடம்பெற்றன.
கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று பெரும் நலன்களையும் வேண்டி துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரை நவராத்திரி நாட்களில் வழிபடுவது இந்துக்களின் தொன்மையான மரபாகும்.
அந்த வகையில், நவராத்திரி வழிபாட்டின் நிறைவு நாளான விஜயதசமியில் குழந்தைகளின் கல்வியை ஆரம்பித்து வைப்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
இதற்கமைய, வவுனியா மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களிலும் இன்று காலை முதல் விசேட அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் ஆராதனைகள் இடம்பெற்றன.
குறிப்பாக, வவுனியா தாண்டிக்குளம் அருள்மிகு ஐயனார் ஆலயம் மற்றும் குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் விஜயதசமி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதன்போது, பெருமளவிலான பெற்றோர் தமது குழந்தைகளுடன் ஆலயங்களுக்கு வருகை தந்து ஏடு தொடக்குதல் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
ஆலய குருமார்களின் வழிகாட்டலில் சிறுவர்களுக்கு நெல் மற்றும் அரிசியில் எழுத்துக்கள் எழுதக் கற்பிக்கப்பட்டு, அவர்களின் கல்விப் பயணம் பாரம்பரிய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியிலும் விஜயதசமியை முன்னிட்டு 'வித்தியாரம்பம்' எனப்படும் ஏடு தொடக்குதல் நிகழ்வு இன்று காலை சுப நேரத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, பாடசாலை அதிபரினால் சிறுவர்களுக்கு அரிசியில் எழுத்துக்கள் எழுதக் கற்பிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.
விஜயதசமியை முன்னிட்டு இடம்பெற்ற இந்த ஆன்மிக நிகழ்வுகளில் பெருமளவிலான பெற்றோர், சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கல்விக்கு முதல் படி வைத்த மழலைகள்: விஜயதசமியில் ஏடு தொடக்குதல் நிகழ்வுகள் நவராத்திரி விரதத்தின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள ஆலயங்கள், பாடசாலைகளில் விசேட பூஜை வழிபாடுகளும் சிறுவர்களுக்கான ஏடு தொடக்குதல் நிகழ்வுகளும் இன்று (20) சிறப்பாக இடம்பெற்றன.கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று பெரும் நலன்களையும் வேண்டி துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரை நவராத்திரி நாட்களில் வழிபடுவது இந்துக்களின் தொன்மையான மரபாகும்.அந்த வகையில், நவராத்திரி வழிபாட்டின் நிறைவு நாளான விஜயதசமியில் குழந்தைகளின் கல்வியை ஆரம்பித்து வைப்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.இதற்கமைய, வவுனியா மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களிலும் இன்று காலை முதல் விசேட அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் ஆராதனைகள் இடம்பெற்றன.குறிப்பாக, வவுனியா தாண்டிக்குளம் அருள்மிகு ஐயனார் ஆலயம் மற்றும் குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் விஜயதசமி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.இதன்போது, பெருமளவிலான பெற்றோர் தமது குழந்தைகளுடன் ஆலயங்களுக்கு வருகை தந்து ஏடு தொடக்குதல் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.ஆலய குருமார்களின் வழிகாட்டலில் சிறுவர்களுக்கு நெல் மற்றும் அரிசியில் எழுத்துக்கள் எழுதக் கற்பிக்கப்பட்டு, அவர்களின் கல்விப் பயணம் பாரம்பரிய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியிலும் விஜயதசமியை முன்னிட்டு 'வித்தியாரம்பம்' எனப்படும் ஏடு தொடக்குதல் நிகழ்வு இன்று காலை சுப நேரத்தில் நடைபெற்றது.பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து, பாடசாலை அதிபரினால் சிறுவர்களுக்கு அரிசியில் எழுத்துக்கள் எழுதக் கற்பிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.விஜயதசமியை முன்னிட்டு இடம்பெற்ற இந்த ஆன்மிக நிகழ்வுகளில் பெருமளவிலான பெற்றோர், சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.