யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு ஒன்று மருதங்கேணி பொலிஸாரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் நாவற்பழம் பறிப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு குறித்த குண்டைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார், வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டைப் பாதுகாப்பான முறையில் அகற்றிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செம்பியன்பற்று பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு ஒன்று மருதங்கேணி பொலிஸாரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் நாவற்பழம் பறிப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு குறித்த குண்டைக் கண்டுள்ளார்.இதனையடுத்து, உடனடியாக மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார், வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டைப் பாதுகாப்பான முறையில் அகற்றிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.