நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 3970 குடும்பங்களைச் சேர்ந்த 14230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம் ,கற்பிட்டி, வண்ணாத்திவில்லு, ஆராச்சிக்கட்டுவ, மாதம்பை, மஹவெவ மற்றும் வென்னப்புவ ஆகிய 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராம சேவகர்கள் பிரிவுக்கு உட்பட்ட 3970 குடும்பங்களைச் சேர்ந்த 14230 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 06 கிராம சேகவர் பிரிவுகளில் 3493 குடும்பங்களைச் சேர்ந்த 12523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 376 குடும்பங்களைச் சேர்ந்த 1388 பேரும், வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 05 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 04 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 08 கிராம சேகவர் பிரிவுகளில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 214 பேரும், மஹவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, காற்று மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளத்தில் இதுவரை 4 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் பாலாவி, நாகவில்லு, கரிக்கட்டை, செம்பட்டை, மதுரங்குளி உள்ளிட்ட பல பிரதேசங்களில் பிரதான மற்றும் உள்வீதிகள் வெள்ள நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இதன் காரணமாக பிரதான மற்றும் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்டத்தில் 3970 குடும்பங்களைச் சேர்ந்த 14230 பேர் பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 3970 குடும்பங்களைச் சேர்ந்த 14230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.புத்தளம் ,கற்பிட்டி, வண்ணாத்திவில்லு, ஆராச்சிக்கட்டுவ, மாதம்பை, மஹவெவ மற்றும் வென்னப்புவ ஆகிய 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராம சேவகர்கள் பிரிவுக்கு உட்பட்ட 3970 குடும்பங்களைச் சேர்ந்த 14230 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 06 கிராம சேகவர் பிரிவுகளில் 3493 குடும்பங்களைச் சேர்ந்த 12523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 376 குடும்பங்களைச் சேர்ந்த 1388 பேரும், வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 05 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 04 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 08 கிராம சேகவர் பிரிவுகளில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 214 பேரும், மஹவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராம சேகவர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு, காற்று மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளத்தில் இதுவரை 4 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.அத்துடன் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் பாலாவி, நாகவில்லு, கரிக்கட்டை, செம்பட்டை, மதுரங்குளி உள்ளிட்ட பல பிரதேசங்களில் பிரதான மற்றும் உள்வீதிகள் வெள்ள நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக பிரதான மற்றும் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.