• Aug 26 2025

110 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலம்; இடித்து அகற்ற நடவடிக்கை!

shanuja / Aug 26th 2025, 9:36 am
image

இராமநாதபுரம் மாவட்டத்தில் 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   


இராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவு நிலப்பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீற்றர் தொலைவுக்கு கடலில் ரயில் மேம்பாலமாக பாம்பன் பாலம்  கடந்த 1914 ஆம் ஆண்டு  அமைக்கப்பட்டது. 


இந்த பாலமானது கடல் பகுதியை கடந்து செல்லும் பெரிய படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்காக இரு பிரிவாக பிரிந்து தூக்கி பின் தண்டவாள நிலையில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டது. 


110 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் கடல் பாலம் பழைய பாம்பன் ரயில் பாலம் ஆகும். இந்த பாலமானது சேதம் அடைந்ததையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 


அதன் அருகே புதிய ரயில் பாலம்  அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது. அதில் லிப்ட் வகை தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி இந்த புதிய தூக்கு பாலத்தை திறந்துவைத்தார். தற்போது  அதில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் பழைய தூக்கு ரயில் பாலத்தை அகற்றுவதற்காக, டெல்லியில் உள்ள ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் சார்பில் (ஆர்.வி.என்.எல்.) அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


அதில் பழைய பாம்பன் பாலத்தின் மொத்த தொகையாக 2.81 கோடி ரூபா நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோர்  5.62 லட்சம் ரூபா  முன்வைப்புத்  தொகை செலுத்தவும் கோரப்பட்டுள்ளது. 


ஒப்பந்தப்புள்ளி கோரியவர்களுக்கான கலந்தாய்வு வரும் 26 ஆம் திகதி  நடைபெறவுள்ளதாகவும்

அதன்படி 4 மாதங்களில் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

110 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலம்; இடித்து அகற்ற நடவடிக்கை இராமநாதபுரம் மாவட்டத்தில் 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவு நிலப்பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீற்றர் தொலைவுக்கு கடலில் ரயில் மேம்பாலமாக பாம்பன் பாலம்  கடந்த 1914 ஆம் ஆண்டு  அமைக்கப்பட்டது. இந்த பாலமானது கடல் பகுதியை கடந்து செல்லும் பெரிய படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்காக இரு பிரிவாக பிரிந்து தூக்கி பின் தண்டவாள நிலையில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டது. 110 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் கடல் பாலம் பழைய பாம்பன் ரயில் பாலம் ஆகும். இந்த பாலமானது சேதம் அடைந்ததையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் அருகே புதிய ரயில் பாலம்  அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது. அதில் லிப்ட் வகை தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி இந்த புதிய தூக்கு பாலத்தை திறந்துவைத்தார். தற்போது  அதில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பழைய தூக்கு ரயில் பாலத்தை அகற்றுவதற்காக, டெல்லியில் உள்ள ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் சார்பில் (ஆர்.வி.என்.எல்.) அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பழைய பாம்பன் பாலத்தின் மொத்த தொகையாக 2.81 கோடி ரூபா நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோர்  5.62 லட்சம் ரூபா  முன்வைப்புத்  தொகை செலுத்தவும் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரியவர்களுக்கான கலந்தாய்வு வரும் 26 ஆம் திகதி  நடைபெறவுள்ளதாகவும்அதன்படி 4 மாதங்களில் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement