• May 22 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி!

Chithra / May 21st 2025, 10:34 am
image

வெலம்பொட - வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில், அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில் மின்சாரம் இணைக்கப்பட்டிருந்தது. 

இதன்போது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்தது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வேலம்பொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி வெலம்பொட - வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயதானவர் என தெரியவந்துள்ளது. இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில், அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில் மின்சாரம் இணைக்கப்பட்டிருந்தது. இதன்போது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்தது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வேலம்பொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement