• May 21 2025

இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே? சபையில் சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டு

Sharmi / May 21st 2025, 10:43 am
image

இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம்  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவி;த்hர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதியை எதிர்பார்த்துள்ளனர். எனினும், இனவழிப்புக்கான நீதி என்பது மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில்கீழ் நீதி கிடைக்குமா என்பதிலும் நம்பிக்கை இல்லை.

இன அழிப்புக்கான நீதி வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக உள்ளது. அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும். மே 18 ஆம் திகதி எமது மக்கள் தன்னெழுச்சியாகவே நினைவேந்தல் நடத்தினர்.

இதன் பின்னணியில் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லை. நீதி வேண்டும் என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.

கனடாவில் இனவழிப்பு நினைவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கனடா தூதுவரை அழைத்து இது தொடர்பில் இலங்கை விளக்கமளித்துள்ளது. இவ்வாறான விடயங்களை செய்வதை விடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

யுத்த வெற்றியை கொண்டாடுவதற்கு ஜனாதிபதி மே 19 ஆம் திகதி சென்றிருந்தார்.

கடந்த ஆட்சிகளின்போதுதான் தற்போதும் வெற்றி கொண்டாட்டம் இடம்பெறுகின்றது. கடந்த தேர்தலில் பாடம் புகட்டிய தமிழ் மக்கள், இனிவரும் காலங்களிலும் சிறந்த பதிலை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே சபையில் சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டு இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவி;த்hர்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,வடக்கில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதியை எதிர்பார்த்துள்ளனர். எனினும், இனவழிப்புக்கான நீதி என்பது மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில்கீழ் நீதி கிடைக்குமா என்பதிலும் நம்பிக்கை இல்லை.இன அழிப்புக்கான நீதி வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக உள்ளது. அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும். மே 18 ஆம் திகதி எமது மக்கள் தன்னெழுச்சியாகவே நினைவேந்தல் நடத்தினர். இதன் பின்னணியில் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லை. நீதி வேண்டும் என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.கனடாவில் இனவழிப்பு நினைவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கனடா தூதுவரை அழைத்து இது தொடர்பில் இலங்கை விளக்கமளித்துள்ளது. இவ்வாறான விடயங்களை செய்வதை விடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.யுத்த வெற்றியை கொண்டாடுவதற்கு ஜனாதிபதி மே 19 ஆம் திகதி சென்றிருந்தார். கடந்த ஆட்சிகளின்போதுதான் தற்போதும் வெற்றி கொண்டாட்டம் இடம்பெறுகின்றது. கடந்த தேர்தலில் பாடம் புகட்டிய தமிழ் மக்கள், இனிவரும் காலங்களிலும் சிறந்த பதிலை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement