ஒடிசா மாநிலம் கோராபுட்டில் ஆர்ப்பரித்து சென்ற அருவிக்குள் நின்று படம் பிடிக்க சென்ற பிரபல யூடியூபர் வெள்ளத்தில் அடித்து காணாமல் செல்லப்பட்டார்.
ஒடிசாவில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள துடுமா அருவி ஆர்ப்பரித்து சென்றுள்ளது. இதனை படம்பிடிக்க சாகர் என்ற பிரபல யூட்யூபர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அவரது நண்பர்கள் டிரோன் மூலம் படம் பிடித்து கொண்டு இருந்த போது, யூடியூபர் சாகர், அருவியின் நடுவே இருந்த பாறை மீது நின்று போஸ் கொடுத்தார். அப்போது எதிர்பாராதவகையில் யூடியூபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அருவியின் நீரோட்டத்தில் சிக்கிய சாகர், நீண்ட நேரமாக பாறையை கடக்க முடியாமல் தவித்தார். அப்போது அதிக நீரோட்டம் காரணமாக சாகர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த யூடியூபரை சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த தகவல் தெரிந்ததும் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து யூடியூபரை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேவையா இது ரீல்ஸ் மோகத்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யூடியூபர். ஒடிசா மாநிலம் கோராபுட்டில் ஆர்ப்பரித்து சென்ற அருவிக்குள் நின்று படம் பிடிக்க சென்ற பிரபல யூடியூபர் வெள்ளத்தில் அடித்து காணாமல் செல்லப்பட்டார்.ஒடிசாவில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள துடுமா அருவி ஆர்ப்பரித்து சென்றுள்ளது. இதனை படம்பிடிக்க சாகர் என்ற பிரபல யூட்யூபர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.அவரது நண்பர்கள் டிரோன் மூலம் படம் பிடித்து கொண்டு இருந்த போது, யூடியூபர் சாகர், அருவியின் நடுவே இருந்த பாறை மீது நின்று போஸ் கொடுத்தார். அப்போது எதிர்பாராதவகையில் யூடியூபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.இதைத்தொடர்ந்து அருவியின் நீரோட்டத்தில் சிக்கிய சாகர், நீண்ட நேரமாக பாறையை கடக்க முடியாமல் தவித்தார். அப்போது அதிக நீரோட்டம் காரணமாக சாகர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த யூடியூபரை சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த தகவல் தெரிந்ததும் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து யூடியூபரை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.