• Aug 17 2025

சேவிஸ் நிலையத்தில் தாக்கிய மின்சாரம்; இளைஞன் பலி! யாழில் சம்பவம்

shanuja / Aug 16th 2025, 10:40 pm
image


யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று  உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சங்கரத்தை - துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது - 17) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த இளைஞன் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சேவிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். வழமை போன்று இன்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மின்சாரம் தாக்கியது.


மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சேவிஸ் நிலையத்தில் தாக்கிய மின்சாரம்; இளைஞன் பலி யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று  உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சங்கரத்தை - துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது - 17) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சேவிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். வழமை போன்று இன்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மின்சாரம் தாக்கியது.மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement