இந்திய மீன்பிடி முதலாளிகளும், அரசியல் வாதிகளும் தமக்கு சாதகமாக திசை திருப்பி அப்பாவி இந்திய மீனவர்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் என்று யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சம்மேளன அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளதாவது,
தொப்பிள்க் கொடி உறவென்று கூறிக்கொண்டு எமது வடக்கின் கடல் வளங்களை சூரையாடுவதை கூலிக்காக கடலில் இறங்கும் தமிழகக் கடற்றொழிலாளர்கள் கைவிட வேண்டும் .
இலங்கையின் எல்லைக்குள் வந்து கடல் வளங்களை சூரையாடிய குற்றங்களுக்காகவே தமிழக மீன்பிடியாளர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது இலங்கையின் இறைமையுடன் கூடிய விடயம். இதை தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் குறித்த விடயத்தை இந்திய மீன்பிடி முதலாளிகளும், அரசியல் வாதிகளும் தமக்கு சாதகமாக திசை திருப்பி அப்பாவி இந்திய கடற்தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர் பாக்கியநாதன் றீகன் தெரிவிக்கையில்,
இந்திய இழுவை மடி படகுகள் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.
இலங்கை இறைமையுள்ள நாடு. எமது நாட்டுக்கென்று சட்ட எல்லை வரையறைகளும் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது இன்றைய ஆட்சியிலும் நாடு வலுவான பாதுகாப்புடன் தான் இருக்கின்றது.
எமது நட்டின் வரையறைகளை மீறினால் எமது நாடு சட்டத்தின் படியே முயற்சிகளை எடுக்கும்.
இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி இந்திய மீன்பிடியாளர்கள் தான்.
ஒருபோதும் சட்டவிரோத தொழிலுக்கு அனுப்பும் பண முதலைகளும், அரசியல் பினாமிகளும் பாதிக்கப்படப் போவதில்லை.
ஆகவே தொப்பிள்க்கொடி உறவென்று கூறிக்கொண்டு எமது வடக்கின் கடல் வளங்களை சூரையாடுவதை கூலிக்காக கடலில் இறங்கும் தமிழகக் கடற்றொழிலாளர்கள் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசியல் வாதிகளே மீனவர்களை ஏமாற்றுகின்றனர் ; உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் - யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஆவேசம் இந்திய மீன்பிடி முதலாளிகளும், அரசியல் வாதிகளும் தமக்கு சாதகமாக திசை திருப்பி அப்பாவி இந்திய மீனவர்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் என்று யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சம்மேளன அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளதாவது, தொப்பிள்க் கொடி உறவென்று கூறிக்கொண்டு எமது வடக்கின் கடல் வளங்களை சூரையாடுவதை கூலிக்காக கடலில் இறங்கும் தமிழகக் கடற்றொழிலாளர்கள் கைவிட வேண்டும் . இலங்கையின் எல்லைக்குள் வந்து கடல் வளங்களை சூரையாடிய குற்றங்களுக்காகவே தமிழக மீன்பிடியாளர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இது இலங்கையின் இறைமையுடன் கூடிய விடயம். இதை தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.ஆனால் குறித்த விடயத்தை இந்திய மீன்பிடி முதலாளிகளும், அரசியல் வாதிகளும் தமக்கு சாதகமாக திசை திருப்பி அப்பாவி இந்திய கடற்தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதனிடையே யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர் பாக்கியநாதன் றீகன் தெரிவிக்கையில், இந்திய இழுவை மடி படகுகள் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.இலங்கை இறைமையுள்ள நாடு. எமது நாட்டுக்கென்று சட்ட எல்லை வரையறைகளும் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது இன்றைய ஆட்சியிலும் நாடு வலுவான பாதுகாப்புடன் தான் இருக்கின்றது.எமது நட்டின் வரையறைகளை மீறினால் எமது நாடு சட்டத்தின் படியே முயற்சிகளை எடுக்கும்.இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி இந்திய மீன்பிடியாளர்கள் தான். ஒருபோதும் சட்டவிரோத தொழிலுக்கு அனுப்பும் பண முதலைகளும், அரசியல் பினாமிகளும் பாதிக்கப்படப் போவதில்லை.ஆகவே தொப்பிள்க்கொடி உறவென்று கூறிக்கொண்டு எமது வடக்கின் கடல் வளங்களை சூரையாடுவதை கூலிக்காக கடலில் இறங்கும் தமிழகக் கடற்றொழிலாளர்கள் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.