• Jun 03 2026

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் பரிதாப மரணம்! வவுனியாவில் சோகம்

Chithra / Jun 2nd 2026, 8:32 pm
image

வவுனியா - கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 


இன்று மாலை குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக குறித்த இளைஞன் உழவு இயந்திரத்திற்குள் தவறி வீழ்ந்துள்ளார்.


இயந்திரத்தில் சிக்குண்டு பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


இவ்விபத்தில் உயிரிழந்தவர் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த  20 வயதுடைய  கஜேந்திரன் குகப்பிரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்


இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் பரிதாப மரணம் வவுனியாவில் சோகம் வவுனியா - கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக குறித்த இளைஞன் உழவு இயந்திரத்திற்குள் தவறி வீழ்ந்துள்ளார்.இயந்திரத்தில் சிக்குண்டு பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இவ்விபத்தில் உயிரிழந்தவர் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த  20 வயதுடைய  கஜேந்திரன் குகப்பிரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement