தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு குறிப்பிட்டாலும், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாக வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர 'கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்படுவது முறையற்றது' என்று குறிப்பிட்டார். இதனால் சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதன்போது எழுந்து உரையாற்றிய நளிந்த ஜயதிஸ்ஸ,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் குறித்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக கூறினார்கள்.
அரசாங்கம் என்ற வகையில் இதனை பாரதூரமான பிரச்சினையாக பார்க்கின்றோம். அவ்வாறு ஆயுதங்கள் இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதே.
இவ்வாறு பாராளுமன்றத்தின் உள்ளே கூறினாலும், வெளியில் கூறினாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அந்த தகவல்களை பொலிஸாருக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பாரதூரமான விடயங்களை குறிப்பிட்டு விட்டு, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் போது அச்சமடைய வேண்டாம். என்றார்.
சிறப்புரிமையில் இருந்துகொண்டு எதனையும் கூற முடியுமா - சிஐடிக்கு அழைக்கப்படுவீர்கள் - சபையில் எச்சரித்த அமைச்சர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு குறிப்பிட்டாலும், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாக வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர 'கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்படுவது முறையற்றது' என்று குறிப்பிட்டார். இதனால் சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.இதன்போது எழுந்து உரையாற்றிய நளிந்த ஜயதிஸ்ஸ,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் குறித்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக கூறினார்கள். அரசாங்கம் என்ற வகையில் இதனை பாரதூரமான பிரச்சினையாக பார்க்கின்றோம். அவ்வாறு ஆயுதங்கள் இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதே. இவ்வாறு பாராளுமன்றத்தின் உள்ளே கூறினாலும், வெளியில் கூறினாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அந்த தகவல்களை பொலிஸாருக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பாரதூரமான விடயங்களை குறிப்பிட்டு விட்டு, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் போது அச்சமடைய வேண்டாம். என்றார்.