பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது. வடபகுதி மக்களின் அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது.
இருப்பினும், இடவசதி இன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்கள் நீடிக்கின்றன.
இந்தத் அஞ்சல் நிலையத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 1 றூட் 24.5 பேர்ச் காணியும் கட்டடமும் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. பின்னர், 2012 ஆம் ஆண்டளவில் அதன் ஒரு பகுதி (8,695 சதுர அடி) அஞ்சல் திணைக்களத்திற்கு விடுவிக்கப்பட்ட போதிலும், மீதமுள்ள பகுதி இன்னும் படையினர் வசமே உள்ளது.
விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன.
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக, வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
வடபிராந்திய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் இந்தத் தபால் நிலையத்தின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை விரைவாக நிர்மாணிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தியுள்ளார்.
பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்குமாறு கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது. வடபகுதி மக்களின் அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது. இருப்பினும், இடவசதி இன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்கள் நீடிக்கின்றன.இந்தத் அஞ்சல் நிலையத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 1 றூட் 24.5 பேர்ச் காணியும் கட்டடமும் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. பின்னர், 2012 ஆம் ஆண்டளவில் அதன் ஒரு பகுதி (8,695 சதுர அடி) அஞ்சல் திணைக்களத்திற்கு விடுவிக்கப்பட்ட போதிலும், மீதமுள்ள பகுதி இன்னும் படையினர் வசமே உள்ளது. விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன.கடந்த மே மாதம் 26 ஆம் திகதி நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக, வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.வடபிராந்திய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் இந்தத் தபால் நிலையத்தின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை விரைவாக நிர்மாணிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தியுள்ளார்.