• May 24 2025

கடல் கொந்தளிப்புக்காக நடுக்கடலில் நங்கூரமிட்ட படகை கரைக்கு இழுத்த காற்று- கரையேற்றும் மீனவர்கள்

Thansita / May 24th 2025, 8:19 am
image

மட்டக்களப்பு காத்தான்குடிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று இன்று மாலை கடுமையான காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு  கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது

நீண்ட நாட்கள் நடுக்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கின்ற அலியா படகு எனப்படுகின்ற பாரிய படகு இவ்வாறு கொந்தளிப்பு காரணமாக கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது

நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த படகு கடைக்கு இழுத்து வரப்பட்டுள்ள நிலையிலும் அவற்றை கரையோரமாக இழுத்து கரை சேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரத்தைகளை எதிர்கொண்டுள்ளனர்.

பெருமளவிலான  மீனவர்கள் ஒன்று திரண்டு பாரிய படகினை கரைக்கு இழுத்து வருவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது

கடல் கொந்தளிப்புக்காக நடுக்கடலில் நங்கூரமிட்ட படகை கரைக்கு இழுத்த காற்று- கரையேற்றும் மீனவர்கள் மட்டக்களப்பு காத்தான்குடிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று இன்று மாலை கடுமையான காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு  கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளதுநீண்ட நாட்கள் நடுக்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கின்ற அலியா படகு எனப்படுகின்ற பாரிய படகு இவ்வாறு கொந்தளிப்பு காரணமாக கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளதுநங்கூரமிடப்பட்டிருந்த குறித்த படகு கடைக்கு இழுத்து வரப்பட்டுள்ள நிலையிலும் அவற்றை கரையோரமாக இழுத்து கரை சேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரத்தைகளை எதிர்கொண்டுள்ளனர்.பெருமளவிலான  மீனவர்கள் ஒன்று திரண்டு பாரிய படகினை கரைக்கு இழுத்து வருவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.தற்போது மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement