• Aug 29 2025

மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்குமா? வடக்கில் இன்று கையெழுத்து போராட்டம்

Chithra / Aug 29th 2025, 3:22 pm
image


செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் இன்று இடம்பெற்று வருகின்றது. 

முல்லைத்தீவு

அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் இன்று கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில்  கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சி.லோகேஸ்வரன், முன்னாள் கரைதுறைப்பற்று தபிசாளர் க.விஜிந்தன், மாந்தை கிழக்கு உபதபிசாளர் வரதன் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், பவுள்ராஜ், குணம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள்,  பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.


வவுனியா

இந்நிலையில் கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியிலும்  இடம்பெற்றிருந்தது.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.

இப்போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சி


இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் கையெழுத்த போராட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து  ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை  முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்,  ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள்  என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.


மன்னார்

குறித்த போராட்டம் இன்றைய தினம்   மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் இடம் பெற்றது.

கையெழுத்து போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அருட் தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.



யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்குமா வடக்கில் இன்று கையெழுத்து போராட்டம் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் இன்று இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவுஅந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் இன்று கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில்  கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சி.லோகேஸ்வரன், முன்னாள் கரைதுறைப்பற்று தபிசாளர் க.விஜிந்தன், மாந்தை கிழக்கு உபதபிசாளர் வரதன் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், பவுள்ராஜ், குணம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள்,  பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.வவுனியாஇந்நிலையில் கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியிலும்  இடம்பெற்றிருந்தது.தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.இப்போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கிளிநொச்சிஇதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் கையெழுத்த போராட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து  ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை  முன்னெடுக்கப்பட்டது.இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்,  ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள்  என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.மன்னார்குறித்த போராட்டம் இன்றைய தினம்   மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் இடம் பெற்றது.கையெழுத்து போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அருட் தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணம்யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement