• Aug 29 2025

சந்நிதியானில் நிகழ்ந்தேறிய 108 சோடிகளின் திருமணம்; ஆயிரக்கணக்கானோரின் ஆசிகளைப் பெற்ற தம்பதிகள்!

shanuja / Aug 28th 2025, 8:45 pm
image

தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் 108 சோடிகளுக்கு பிரம்மாண்டமாக இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  


திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாமல் இருந்தவர்களை இனங்கண்டு அதில் 108 சோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது என்று அண்மையில் யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இ.ஜெயசேகரம் தெரிவித்திருந்தார். 


அதற்கமையவே இன்று 108 சோடிகளுக்கும் செல்வச்சந்நிதி முருகன் சந்நிதானத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 


சிங்கப்பூர் வாழ் தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் திருமணத்திற்கு தேவையான  தாலி, சீதனம் உள்ளிட்ட அனைத்தும் குறித்த தம்பதியினருக்கு வழங்கப்பட்டு திருமணம் நிகழ்த்தப்பட்டது. 


திருமணம் நிகழ்ந்தேறியதையடுத்து திருமணத்தை நிகழ்த்திய புலம்பெயர்ந்தவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்தன. 


அவரது உணர்ச்சிக்கு மதிப்பளித்து 108 சோடிகளின் குடும்ப உறவினர்களைத் தவிர, பெரியார்களும், சமூக நலன்விரும்பிகளும் எனப் பலர் கலந்து கொண்டு தம்பதியினருக்கு ஆசிகளை வழங்கி வாழத்துத் தெரிவித்துள்ளனர்.

சந்நிதியானில் நிகழ்ந்தேறிய 108 சோடிகளின் திருமணம்; ஆயிரக்கணக்கானோரின் ஆசிகளைப் பெற்ற தம்பதிகள் தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் 108 சோடிகளுக்கு பிரம்மாண்டமாக இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாமல் இருந்தவர்களை இனங்கண்டு அதில் 108 சோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது என்று அண்மையில் யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இ.ஜெயசேகரம் தெரிவித்திருந்தார். அதற்கமையவே இன்று 108 சோடிகளுக்கும் செல்வச்சந்நிதி முருகன் சந்நிதானத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. சிங்கப்பூர் வாழ் தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் திருமணத்திற்கு தேவையான  தாலி, சீதனம் உள்ளிட்ட அனைத்தும் குறித்த தம்பதியினருக்கு வழங்கப்பட்டு திருமணம் நிகழ்த்தப்பட்டது. திருமணம் நிகழ்ந்தேறியதையடுத்து திருமணத்தை நிகழ்த்திய புலம்பெயர்ந்தவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்தன. அவரது உணர்ச்சிக்கு மதிப்பளித்து 108 சோடிகளின் குடும்ப உறவினர்களைத் தவிர, பெரியார்களும், சமூக நலன்விரும்பிகளும் எனப் பலர் கலந்து கொண்டு தம்பதியினருக்கு ஆசிகளை வழங்கி வாழத்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement