முல்லைத்தீவு - கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயமாகிய சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி இரவு கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்றுவரை கரைக்கு திரும்பவில்லை.
என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் நேற்று கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும்
வர்ணகுலசூரிய நெகித் ரவிஷ பிரனாந்து என்னும் 23 வயது இளைஞனே மாயமாகியுள்ளார்
குறித்த இளைஞன் மீன்பிடிக்கச் சென்ற படகு நடுக்கடலில் நங்கூரமிட்டபடிநேற்று காலை தொழிலுக்கு சென்ற மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் இளைஞனை தேடியும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலுக்கு சென்ற இளைஞன் இரு நாட்களாக மாயம்; முல்லைத்தீவில் தவிக்கும் குடும்பத்தினர் முல்லைத்தீவு - கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயமாகிய சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.கடந்த 27 ஆம் திகதி இரவு கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்றுவரை கரைக்கு திரும்பவில்லை.என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் நேற்று கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும் வர்ணகுலசூரிய நெகித் ரவிஷ பிரனாந்து என்னும் 23 வயது இளைஞனே மாயமாகியுள்ளார்குறித்த இளைஞன் மீன்பிடிக்கச் சென்ற படகு நடுக்கடலில் நங்கூரமிட்டபடிநேற்று காலை தொழிலுக்கு சென்ற மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் இளைஞனை தேடியும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.