• May 23 2025

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..? மீண்டும் சுகாதார நடைமுறைகள்

Chithra / May 22nd 2025, 4:22 pm
image

 

இலங்கையில் புதிய கொவிட் - 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வாரங்களில், பல ஆசிய நாடுகளில் புதிய கொவிட் - 19 திரிபு பரவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் பொது சுகாதாரத்தைத் தயார்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் சாத்தியமான தொற்றுநோய் சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக ஆய்வக ஆய்வு முறையும் செயற்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உட்பட அடிப்படை சுகாதார நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் கோவிட்-19 திரிபுகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருவதால், அவர்கள் வழங்கும் தகவல்களுக்கு மட்டுமே கவனம் செலுத்துமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.

இதேவேளை கொவிட்-19 தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கோரிக்கை விடுத்துள்ளார். 

எவ்வாறாயினும் குறித்த திரிபு இதுவரையில் இலங்கையில் பதிவாகவில்லை என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா. மீண்டும் சுகாதார நடைமுறைகள்  இலங்கையில் புதிய கொவிட் - 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.சமீபத்திய வாரங்களில், பல ஆசிய நாடுகளில் புதிய கொவிட் - 19 திரிபு பரவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.இதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் பொது சுகாதாரத்தைத் தயார்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும், இலங்கையில் சாத்தியமான தொற்றுநோய் சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக ஆய்வக ஆய்வு முறையும் செயற்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.இருப்பினும், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உட்பட அடிப்படை சுகாதார நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.சுகாதார அதிகாரிகள் கோவிட்-19 திரிபுகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருவதால், அவர்கள் வழங்கும் தகவல்களுக்கு மட்டுமே கவனம் செலுத்துமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.இதேவேளை கொவிட்-19 தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் குறித்த திரிபு இதுவரையில் இலங்கையில் பதிவாகவில்லை என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement