தோப்பூர் -அப்ரார் நகர் கிராமத்திற்குள் இன்று (14) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் மக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதன்போது சுமார் 6க்கும் மேற்பட்ட வீடுகளில் காணப்பட்ட தென்னை,வாழை உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.
மேலும் வீட்டு சுற்று வேலி தூண்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
அதேவேளை காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தமது பயிர்கள் சேதமாகியுள்ளதோடு வீடுகளில் இருப்பதும் அச்சமாக உள்ளதாகவும் தோப்பூர் -அப்ரார் நகர் கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
எனவே, இது விடயத்தில் உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்து தருவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுத் தர வேண்டும் எனவும் தோப்பூர் அப்ரார் நகர் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்: விவசாய நிலங்கள் நாசம். தோப்பூர் -அப்ரார் நகர் கிராமத்திற்குள் இன்று (14) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் மக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.இதன்போது சுமார் 6க்கும் மேற்பட்ட வீடுகளில் காணப்பட்ட தென்னை,வாழை உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.மேலும் வீட்டு சுற்று வேலி தூண்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.அதேவேளை காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தமது பயிர்கள் சேதமாகியுள்ளதோடு வீடுகளில் இருப்பதும் அச்சமாக உள்ளதாகவும் தோப்பூர் -அப்ரார் நகர் கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.எனவே, இது விடயத்தில் உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்து தருவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுத் தர வேண்டும் எனவும் தோப்பூர் அப்ரார் நகர் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.