• May 15 2025

கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது அரசாங்கம் திணறுவது ஏன்? - சஜித் கேள்வி

Thansita / May 14th 2025, 9:55 pm
image

இரண்டு மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாகக் கூறிய அரசாங்கத்தால், இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது போயுள்ளது என எதிர்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச கூறியுள்ளார் மேலும் 

மக்கள் மிகுந்த அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் இன்று, வாழ்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம், நாட்டின் கொலைகாரக் கும்பல்கள், பாதாள உலகக் கும்பல்கள், குண்டர்கள், T-56 தோட்டாக்கள், பயோனெட்டுகள் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. 

நாட்டின் சட்டம் அமுலில் இல்லை. முற்றத்திலும், வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும், தெருக்களிலும், நீதிமன்றத்திலும் கூட கொலைகள் நடக்கின்றன. சமீபத்திய மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சாதாரண நிலைமை என அரசாங்கம் கூறுகிறது.

 முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, 2 மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் நாட்டில் தினமும் கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தமது இயலாமையை நியாயப்படுத்தாது மக்களை வாழ வைப்பதே ஆட்சியாளரின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது அரசாங்கம் திணறுவது ஏன் - சஜித் கேள்வி இரண்டு மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாகக் கூறிய அரசாங்கத்தால், இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது போயுள்ளது என எதிர்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச கூறியுள்ளார் மேலும் மக்கள் மிகுந்த அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் இன்று, வாழ்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம், நாட்டின் கொலைகாரக் கும்பல்கள், பாதாள உலகக் கும்பல்கள், குண்டர்கள், T-56 தோட்டாக்கள், பயோனெட்டுகள் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. நாட்டின் சட்டம் அமுலில் இல்லை. முற்றத்திலும், வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும், தெருக்களிலும், நீதிமன்றத்திலும் கூட கொலைகள் நடக்கின்றன. சமீபத்திய மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சாதாரண நிலைமை என அரசாங்கம் கூறுகிறது. முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, 2 மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் நாட்டில் தினமும் கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தமது இயலாமையை நியாயப்படுத்தாது மக்களை வாழ வைப்பதே ஆட்சியாளரின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement