• May 15 2025

30 கோடி - சிக்குவார்களா டிரான், தேசபந்து? ஹரக் கட்டா உடைத்த மர்மம்?

Thansita / May 14th 2025, 9:39 pm
image

"முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனுக்கு 30 கோடி ரூபாவை வழங்க மறுத்ததால் தங்காலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்'' என பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சித்தக விக்ரமரத்னே, ஹரக் கட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற விசாரணைக்குப் பின்னர் கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டபோதே ஹரக் கட்டா இவ்வாறு தெரிவித்தார்.

"சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. நான் அவற்றை அப்போது வெளிப்படுத்துவேன்"

தங்காலையில் தான் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் மாதத்திற்கு ரூ.1 கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்

கடந்த மார்ச் 2023 இல், ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷிக என்ற குடு சலிந்து ஆகியோர் மடகாஸ்கரில் இருந்து இலங்கைக்கு சிஐடி குழுவினரால் நாடு கடத்தப்பட்டனர். 

அதன் பின்னர் அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் காவலில் தங்காலை பழைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

30 கோடி - சிக்குவார்களா டிரான், தேசபந்து ஹரக் கட்டா உடைத்த மர்மம் "முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனுக்கு 30 கோடி ரூபாவை வழங்க மறுத்ததால் தங்காலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்'' என பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சித்தக விக்ரமரத்னே, ஹரக் கட்டா குற்றம் சாட்டியுள்ளார்.இன்று இடம்பெற்ற விசாரணைக்குப் பின்னர் கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டபோதே ஹரக் கட்டா இவ்வாறு தெரிவித்தார்."சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. நான் அவற்றை அப்போது வெளிப்படுத்துவேன்"தங்காலையில் தான் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் மாதத்திற்கு ரூ.1 கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்கடந்த மார்ச் 2023 இல், ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷிக என்ற குடு சலிந்து ஆகியோர் மடகாஸ்கரில் இருந்து இலங்கைக்கு சிஐடி குழுவினரால் நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர் அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் காவலில் தங்காலை பழைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement