மணப்பெண் மற்றும் அழகுக்கலையில் இரண்டு உலக சாதனைகளை ஒரே மேடையில் இம்முறை நிலைநாட்டவுள்ளதாக சாமுத்ரிகா அழகுக்கலை பயிற்சி நிலைய நிறுவனர் திருமதி அனு குமரேசன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த முறை எமது அழகுக்கலை பயிற்சி நிலையத்தினால் அழகுக்கலை சம்பந்தமான ஒரு உலக சாதனை நிலைநாட்டப்பட்டு அது ஆசிய சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டு, எமது சாமுத்ரிகா பெண்கள் அழகுக்கலை பயிற்சி நிலையத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டோம்.
அதே வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி கொழும்பிலுள்ள கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ள போட்டியில் துறைசார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் மணப்பெண் மற்றும் அழகுக்கலை என இரு துறைகளிலும் ஒரே நிகழ்வில் உலக சாதனை புரிய திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
அத்துடன் இம்முறை இந்த உலக சாதனை நிகழ்வானது ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் இந்த இரட்டை உலக சாதனை நிகழ்வின் ஞாபகார்த்தமாக மகரகமை அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் சிறுவர்கள் பிரிவிற்கு தேவையான வைத்திய உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரே மேடையில் இரட்டை உலக சாதனை; தயாராகும் சாமுத்ரிகா பெண்கள் மணப்பெண் மற்றும் அழகுக்கலையில் இரண்டு உலக சாதனைகளை ஒரே மேடையில் இம்முறை நிலைநாட்டவுள்ளதாக சாமுத்ரிகா அழகுக்கலை பயிற்சி நிலைய நிறுவனர் திருமதி அனு குமரேசன் தெரிவித்தார்.இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த முறை எமது அழகுக்கலை பயிற்சி நிலையத்தினால் அழகுக்கலை சம்பந்தமான ஒரு உலக சாதனை நிலைநாட்டப்பட்டு அது ஆசிய சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டு, எமது சாமுத்ரிகா பெண்கள் அழகுக்கலை பயிற்சி நிலையத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டோம்.அதே வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி கொழும்பிலுள்ள கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ள போட்டியில் துறைசார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் மணப்பெண் மற்றும் அழகுக்கலை என இரு துறைகளிலும் ஒரே நிகழ்வில் உலக சாதனை புரிய திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். அத்துடன் இம்முறை இந்த உலக சாதனை நிகழ்வானது ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இதேநேரம் இந்த இரட்டை உலக சாதனை நிகழ்வின் ஞாபகார்த்தமாக மகரகமை அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் சிறுவர்கள் பிரிவிற்கு தேவையான வைத்திய உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.