• Oct 22 2026

361 மதுபான அனுமதிப்பத்திரங்களின் பின்னணியில் யார்? சபையில் சரமாரிக் கேள்வி!

Chithra / Oct 21st 2026, 2:57 pm
image

 

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபானசாலைகளைத் திறக்கும் நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் நலன்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளை எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மதுபானசாலைகளை அமைப்பது தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளார்.


வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி என்பது மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பொதுச் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், 2024ஆம் ஆண்டு 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


குறித்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்குப் பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பெயர்கள், அவற்றைப் பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் முடிவுகளை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.


அத்துடன், வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களில் பின்னர் எத்தனை இரத்துச் செய்யப்பட்டன என்பது தொடர்பான விபரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும் பரவலாக இடம்பெற்று வருவது தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.


மேலும், சட்டபூர்வமாக உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் அதிக வரிகள் காரணமாக, பொதுமக்கள் விலை குறைந்த சட்டவிரோத மதுபானங்களை நாடும் நிலை உருவாகியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இவ்வாறான நிலைமை மதுபானம் தொடர்பான சுகாதாரப் பாதிப்புகளை அதிகரிப்பதுடன், அரச வைத்தியசாலைகள் மீதான சுமையையும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கமைய, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாகப் பதிவான குற்றங்கள், மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான மாவட்ட ரீதியான புள்ளிவிபரங்களை வெளியிடுமாறும் கோரியுள்ளார்.


மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் எதிர்ப்புகளைக் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இதற்கான சட்டத்திருத்த வரைபுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதுள்ள மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


361 மதுபான அனுமதிப்பத்திரங்களின் பின்னணியில் யார் சபையில் சரமாரிக் கேள்வி  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபானசாலைகளைத் திறக்கும் நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் நலன்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளை எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மதுபானசாலைகளை அமைப்பது தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளார்.வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி என்பது மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பொதுச் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், 2024ஆம் ஆண்டு 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.குறித்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்குப் பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பெயர்கள், அவற்றைப் பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் முடிவுகளை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.அத்துடன், வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களில் பின்னர் எத்தனை இரத்துச் செய்யப்பட்டன என்பது தொடர்பான விபரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும் பரவலாக இடம்பெற்று வருவது தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.மேலும், சட்டபூர்வமாக உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் அதிக வரிகள் காரணமாக, பொதுமக்கள் விலை குறைந்த சட்டவிரோத மதுபானங்களை நாடும் நிலை உருவாகியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறான நிலைமை மதுபானம் தொடர்பான சுகாதாரப் பாதிப்புகளை அதிகரிப்பதுடன், அரச வைத்தியசாலைகள் மீதான சுமையையும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கமைய, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாகப் பதிவான குற்றங்கள், மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான மாவட்ட ரீதியான புள்ளிவிபரங்களை வெளியிடுமாறும் கோரியுள்ளார்.மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் எதிர்ப்புகளைக் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதற்கான சட்டத்திருத்த வரைபுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement