• May 01 2025

நீதித்துறையில் பெண்கள் எங்கே? சஜித் கேள்வி!

Chithra / Mar 8th 2025, 1:06 pm
image


நீதித்துறையில் 15 நீதிபதிகளில் ஒருவர் கூட பெண் நீதிபதி கிடையாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் பாராளுமன்றத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மீதான விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் அவர் தெரிவிக்கையில், 

நீதித்துறையில் 15 நீதிபதிகளில் ஒருவர் கூட பெண் நீதிபதி கிடையாது. அதுபோல உச்ச நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட 17 பேரில் மூன்று பேர் பெண்களாக இருக்கிறார்கள்.

முகாமைத்துவ பதவிகளில் 2019 ஆம் ஆண்டு 37 சதவீதம் பேர் இருந்திருக்கிறார்கள். பிரதம நிறைவேற்று பதவிகளில் 116 பேரே இருக்கிறார்கள். 

இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த சதவீதத்தை இன்னும் அதிகரிப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். பொறியியல் துறையில் பெண்கள் 25 சதவிகிதமே இருக்கிறார்கள்.

பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் நூற்றுக்கு எண்பது சதவீதம் ஆண்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது. வர்த்தக விளம்பரங்களில் ஆண்களுடைய ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக பெண்கள் காட்டப்படுகிறார்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நூற்றுக்கு நான்கு வீதமே அறிக்கையிடப்படுகிறது.

இலங்கையில் பெண்கள் நெருக்கமான ஒரு நபரினால் வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் இரண்டு மடங்காக இருக்கிறது எனத்தெரிவித்தார்

நீதித்துறையில் பெண்கள் எங்கே சஜித் கேள்வி நீதித்துறையில் 15 நீதிபதிகளில் ஒருவர் கூட பெண் நீதிபதி கிடையாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்றையதினம் பாராளுமன்றத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மீதான விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அவர் தெரிவிக்கையில், நீதித்துறையில் 15 நீதிபதிகளில் ஒருவர் கூட பெண் நீதிபதி கிடையாது. அதுபோல உச்ச நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட 17 பேரில் மூன்று பேர் பெண்களாக இருக்கிறார்கள்.முகாமைத்துவ பதவிகளில் 2019 ஆம் ஆண்டு 37 சதவீதம் பேர் இருந்திருக்கிறார்கள். பிரதம நிறைவேற்று பதவிகளில் 116 பேரே இருக்கிறார்கள். இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த சதவீதத்தை இன்னும் அதிகரிப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். பொறியியல் துறையில் பெண்கள் 25 சதவிகிதமே இருக்கிறார்கள்.பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் நூற்றுக்கு எண்பது சதவீதம் ஆண்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது. வர்த்தக விளம்பரங்களில் ஆண்களுடைய ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக பெண்கள் காட்டப்படுகிறார்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நூற்றுக்கு நான்கு வீதமே அறிக்கையிடப்படுகிறது.இலங்கையில் பெண்கள் நெருக்கமான ஒரு நபரினால் வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் இரண்டு மடங்காக இருக்கிறது எனத்தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement