• May 08 2025

உயிர்மாய்த்த மாணவின் மரணத்திற்கு நீதி வேண்டும்; கொழும்பில் மாபெரும் போராட்டம்! குவிக்கப்பட்ட பொலிஸார்

Chithra / May 8th 2025, 10:43 am
image


கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் இப்போராட்டம் ஆரம்பமானது. 

இதைத்தொடர்ந்து இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு தமது எதிர்ப்பை மக்கள் தெரிவித்தனர். 

அதன்பின் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள மரணித்த சிறுமியின் வீட்டிற்கு பேரணியாக சென்று அவ் விடத்திற்கு முன் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அத்தோடு இச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கருத்து தெரிவித்தனர். 

இறுதியாக இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை வருகை தந்த அனைவரும் நிகழ்த்தினர்.  

இதேவேளை மழையையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸாரும் குவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


உயிர்மாய்த்த மாணவின் மரணத்திற்கு நீதி வேண்டும்; கொழும்பில் மாபெரும் போராட்டம் குவிக்கப்பட்ட பொலிஸார் கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் இப்போராட்டம் ஆரம்பமானது. இதைத்தொடர்ந்து இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு தமது எதிர்ப்பை மக்கள் தெரிவித்தனர். அதன்பின் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள மரணித்த சிறுமியின் வீட்டிற்கு பேரணியாக சென்று அவ் விடத்திற்கு முன் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அத்தோடு இச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கருத்து தெரிவித்தனர். இறுதியாக இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை வருகை தந்த அனைவரும் நிகழ்த்தினர்.  இதேவேளை மழையையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸாரும் குவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement