இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீரை அருந்துவதாகக் கூறப்படும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், அவர் உண்மையில் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகிறார் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
‘அக்வா டி கிரிஸ்டல்லோ’ (Acqua di Cristallo) என அழைக்கப்படும் இந்தத் தண்ணீர் பாட்டிலின் விலை சுமார் 60,000 அமெரிக்க டொலர்கள் எனக் கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 50 இலட்சம் ரூபாயாகும். பிஜி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் இயற்கை ஊற்று நீருடன், ஐஸ்லாந்தின் பனிப்பாறை நீரைக் கலந்து, அதில் 24 காரட் தங்கத்தின் துகள்களையும் சேர்த்து தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் பாட்டிலும் 24 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தண்ணீரில் உள்ள காரத்தன்மை சருமப் பொலிவுக்கும் உடலின் நீரேற்றத்திற்கும் உதவும் என விளம்பரப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகைய மருத்துவ அல்லது சரும நலப் பயன்கள் உறுதிப்படுத்தப்பட்டவை எனக் கருத முடியாது.
இதற்கிடையில், நீதா அம்பானி இந்தத் தண்ணீரைக் குடிப்பதாகப் பரவிய புகைப்படம் திருத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அவர் தினமும் 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீரைக் குடிக்கிறார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது.
தங்கத் துகள்கள் கலந்த தண்ணீர்- ஒரு போத்தல் ரூ.50 இலட்சம் எனக் கூறப்படும் ஆடம்பரப் பானம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீரை அருந்துவதாகக் கூறப்படும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், அவர் உண்மையில் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகிறார் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.‘அக்வா டி கிரிஸ்டல்லோ’ (Acqua di Cristallo) என அழைக்கப்படும் இந்தத் தண்ணீர் பாட்டிலின் விலை சுமார் 60,000 அமெரிக்க டொலர்கள் எனக் கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 50 இலட்சம் ரூபாயாகும். பிஜி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் இயற்கை ஊற்று நீருடன், ஐஸ்லாந்தின் பனிப்பாறை நீரைக் கலந்து, அதில் 24 காரட் தங்கத்தின் துகள்களையும் சேர்த்து தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் பாட்டிலும் 24 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் தண்ணீரில் உள்ள காரத்தன்மை சருமப் பொலிவுக்கும் உடலின் நீரேற்றத்திற்கும் உதவும் என விளம்பரப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகைய மருத்துவ அல்லது சரும நலப் பயன்கள் உறுதிப்படுத்தப்பட்டவை எனக் கருத முடியாது.இதற்கிடையில், நீதா அம்பானி இந்தத் தண்ணீரைக் குடிப்பதாகப் பரவிய புகைப்படம் திருத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அவர் தினமும் 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீரைக் குடிக்கிறார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது.