• Nov 05 2026

இரட்டைவாய்க்கால் - சாலை வீதியின் சீரமைப்பை முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை

Ziya / Nov 5th 2026, 9:48 am
image

முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து சாலைவரையான வீதியின் சீரமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.


எனவே இவ்வாறு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள மாத்தளன் தொடக்கம் சாலைவரையான வீதியின் சீரமைப்புப் பணிகளை முழுமைப்படுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அம்பலவன் பொக்கணை கிராம மக்கள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அம்பலவன் பொக்கணை மக்களின் வேண்டுகோளுக்கமைய அப்பகுதிக்கு நேரில்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சீரமைப்புப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள குறித்த வீதியைப் பார்வையிட்டதுடன், இதனால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே மக்களால் மேற்கண்டாவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,


இறுதிப்போர் முனைப்புப்பெற்றிருந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட குறித்த வீதியானது, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே நீண்டகாலமாக காணப்பட்டது.


இந்நிலையில் அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கைகளையடுத்து குறித்த வீதியின் சீரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


இத்தகையசூழலில் இவ்வாறு தொடங்கப்பட்ட இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலைவரையான வீதியின் சீரமைப்புப் பணிகள் கடந்த நான்கு மாதங்களாக இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அம்பலவன் பொக்கணைக் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.


குறித்த வீதிச் சீரமைப்புப் பணிகள் இவ்வாறு கைவிடப்பட்டுள்ளதால் அவ்வீதியைப் பயன்படுத்தும் வலைஞர்மடம், அம்பலவன் பொக்கணை, புதுமாத்தளன் கிராமமக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது.


குறிப்பாக முல்லைத்தீவுமாவட்ட வைத்தியசாலை, முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தாம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.


தற்போது இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு ஊடாக சுமார் 15கிலோமீற்றர் தூரம் பயணித்தே முல்லைத்தீவிற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் மக்களால் தெரிவிக்கப்பட்டது


அதேவேளை மழைகாலத்தில் வெள்ளப்பெருக்கினால் தமது கிராமங்களுக்கான அனைத்து போக்குவரத்து மார்க்கங்களும் முடங்குவதால், படகில் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.


எனவே இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள  குறித்த இரட்டை வாய்க்கால் தொடக்கம் சாலைவரையான வீதியின் சீரமைப்பை விரைவாக முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில் அப்பகுதி மக்களின் குறைபாடுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலைவரைமான வீதியின் சீரமைப்பை விரைவாக முழுமைப்படுத்துவது தொடர்பில் உரியதரப்பினருக்கு தம்மால் வலியுறுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இரட்டைவாய்க்கால் - சாலை வீதியின் சீரமைப்பை முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து சாலைவரையான வீதியின் சீரமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.எனவே இவ்வாறு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள மாத்தளன் தொடக்கம் சாலைவரையான வீதியின் சீரமைப்புப் பணிகளை முழுமைப்படுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அம்பலவன் பொக்கணை கிராம மக்கள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.அம்பலவன் பொக்கணை மக்களின் வேண்டுகோளுக்கமைய அப்பகுதிக்கு நேரில்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சீரமைப்புப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள குறித்த வீதியைப் பார்வையிட்டதுடன், இதனால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே மக்களால் மேற்கண்டாவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,இறுதிப்போர் முனைப்புப்பெற்றிருந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட குறித்த வீதியானது, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே நீண்டகாலமாக காணப்பட்டது.இந்நிலையில் அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கைகளையடுத்து குறித்த வீதியின் சீரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.இத்தகையசூழலில் இவ்வாறு தொடங்கப்பட்ட இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலைவரையான வீதியின் சீரமைப்புப் பணிகள் கடந்த நான்கு மாதங்களாக இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அம்பலவன் பொக்கணைக் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.குறித்த வீதிச் சீரமைப்புப் பணிகள் இவ்வாறு கைவிடப்பட்டுள்ளதால் அவ்வீதியைப் பயன்படுத்தும் வலைஞர்மடம், அம்பலவன் பொக்கணை, புதுமாத்தளன் கிராமமக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது.குறிப்பாக முல்லைத்தீவுமாவட்ட வைத்தியசாலை, முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தாம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.தற்போது இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு ஊடாக சுமார் 15கிலோமீற்றர் தூரம் பயணித்தே முல்லைத்தீவிற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் மக்களால் தெரிவிக்கப்பட்டதுஅதேவேளை மழைகாலத்தில் வெள்ளப்பெருக்கினால் தமது கிராமங்களுக்கான அனைத்து போக்குவரத்து மார்க்கங்களும் முடங்குவதால், படகில் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.எனவே இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள  குறித்த இரட்டை வாய்க்கால் தொடக்கம் சாலைவரையான வீதியின் சீரமைப்பை விரைவாக முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் அப்பகுதி மக்களின் குறைபாடுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலைவரைமான வீதியின் சீரமைப்பை விரைவாக முழுமைப்படுத்துவது தொடர்பில் உரியதரப்பினருக்கு தம்மால் வலியுறுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement