• Nov 04 2026

தெமோதரை எல்லந்த பகுதியில் வீட்டின் மீது கற்பாறைகள் சரிந்ததில் வீடு பலத்த சேதம் !

Ziya / Nov 4th 2026, 10:33 am
image

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவும் தெமோதரை எல்லந்த பகுதியில் நேற்று முன்தினம் (02.11.2026) ம் திகதி இரவு வீடொன்றின் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குடியிருப்பு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.


இதன் போது குறித்த குடியிருப்பில் வசித்து வந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


சம்பவத்தைத் தொடர்ந்து, வீட்டில் வசித்து வந்தவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதேவேளை, பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த பதுளை மாவட்ட முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


குறிப்பாக, மண்சரிவு அபாயம், கற்பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


தொடர்ச்சியான மழை காரணமாக மலைப்பகுதிகளில் அனர்த்த அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் எவ்வித அலட்சியமும் இன்றி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தெமோதரை எல்லந்த பகுதியில் வீட்டின் மீது கற்பாறைகள் சரிந்ததில் வீடு பலத்த சேதம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவும் தெமோதரை எல்லந்த பகுதியில் நேற்று முன்தினம் (02.11.2026) ம் திகதி இரவு வீடொன்றின் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குடியிருப்பு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இதன் போது குறித்த குடியிருப்பில் வசித்து வந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.சம்பவத்தைத் தொடர்ந்து, வீட்டில் வசித்து வந்தவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதேவேளை, பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த பதுளை மாவட்ட முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.குறிப்பாக, மண்சரிவு அபாயம், கற்பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.தொடர்ச்சியான மழை காரணமாக மலைப்பகுதிகளில் அனர்த்த அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் எவ்வித அலட்சியமும் இன்றி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement