• Nov 05 2026

வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்! நுவரெலியாவில் நடந்தது என்ன?

Chithra / Nov 3rd 2026, 2:24 pm
image


நுவரெலியா, மீப்பிலிமான பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் விஷவாயுவைச் சுவாசித்தமையினால் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், 46 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


குறித்த தம்பதியினர் மீப்பிலிமான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுற்றுலா விடுதியொன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 


கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை, அதற்கு அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாகத் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, பார்பிகியூ (BBQ) அடுப்பைப் பற்றவைத்து அதனை அறைக்குள் வைத்துவிட்டு இருவரும் உறங்கச் சென்றுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், இன்று அதிகாலை உறவினர்கள் இருவரையும் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அவர்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.


இதனையடுத்து, உறவினர்கள் அப்பகுதி கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளனர். அவர் குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டபோது, தம்பதியினர் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


உயிரிழந்த ஆண் கப்பல் ஒன்றின் தலைவராக (Captain) பணியாற்றி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் நுவரெலியாவில் நடந்தது என்ன நுவரெலியா, மீப்பிலிமான பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் விஷவாயுவைச் சுவாசித்தமையினால் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், 46 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த தம்பதியினர் மீப்பிலிமான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுற்றுலா விடுதியொன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை, அதற்கு அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாகத் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, பார்பிகியூ (BBQ) அடுப்பைப் பற்றவைத்து அதனை அறைக்குள் வைத்துவிட்டு இருவரும் உறங்கச் சென்றுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இன்று அதிகாலை உறவினர்கள் இருவரையும் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அவர்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.இதனையடுத்து, உறவினர்கள் அப்பகுதி கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளனர். அவர் குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டபோது, தம்பதியினர் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.உயிரிழந்த ஆண் கப்பல் ஒன்றின் தலைவராக (Captain) பணியாற்றி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement