• Apr 20 2026

அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் தீர்மானம்!

shanu / Feb 27th 2026, 12:35 pm
image

நாட்டில் இன்று (27) முதல் அனைத்து பேரிடர் நிவாரண நடவடிக்கைகளிலிருந்தும் விலக கிராம அலுவலர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் அனர்த்த நிவாரண அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். 



டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முறையான மதிப்பீட்டு முறைமை இல்லாததாலும், நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாததாலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படுவதாக இலங்கை கிராம அலுவலர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், சுகாதார அமைச்சரின் கருத்தின் பேரில் இயங்கும் ஆரோக்கிய ஆரம்ப சுகாதார சேவை மையங்களின் செயல்பாடுகளிலிருந்து வரும் திங்கட்கிழமை முதல் விலக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் தீர்மானம் நாட்டில் இன்று (27) முதல் அனைத்து பேரிடர் நிவாரண நடவடிக்கைகளிலிருந்தும் விலக கிராம அலுவலர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் அனர்த்த நிவாரண அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முறையான மதிப்பீட்டு முறைமை இல்லாததாலும், நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாததாலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படுவதாக இலங்கை கிராம அலுவலர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், சுகாதார அமைச்சரின் கருத்தின் பேரில் இயங்கும் ஆரோக்கிய ஆரம்ப சுகாதார சேவை மையங்களின் செயல்பாடுகளிலிருந்து வரும் திங்கட்கிழமை முதல் விலக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement