• Apr 23 2026

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் விஜய்! முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

Chithra / Apr 23rd 2026, 9:49 am
image

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் பதிவு செய்தார்.


சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.


நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், அவரது வாக்களிப்பு அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.


பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விஜய்யை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.


வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.


இதேவேளை தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.


சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வருகை தந்தார். 


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


சரியாக 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் வாக்காளராக அவர் தனது ஜனநாயக கடமையைச் செய்து முடித்தார்.


வாக்களித்த பின் தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டிய அவர், செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


அஜித் வருகையை ஒட்டி அந்தப் பகுதியில் பொலிஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


அவரைத் தொடர்ந்து மற்ற திரை நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பகுதிகளில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.  

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் விஜய் முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் பதிவு செய்தார்.சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், அவரது வாக்களிப்பு அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விஜய்யை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.இதேவேளை தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வருகை தந்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.சரியாக 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் வாக்காளராக அவர் தனது ஜனநாயக கடமையைச் செய்து முடித்தார்.வாக்களித்த பின் தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டிய அவர், செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.அஜித் வருகையை ஒட்டி அந்தப் பகுதியில் பொலிஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரைத் தொடர்ந்து மற்ற திரை நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பகுதிகளில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement