இணையவழி வணிகத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம் (Telegram) செயலி ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழி வணிகத்தின் மூலம் பெருந்தொகையான பணத்தைச் சம்பாதிக்க முடியும் என ஆசைவார்த்தை கூறி,
151,000 ரூபாயை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, இணையவழி வணிக நடவடிக்கைகள் மூலம் 13 கோடியே 50 இலட்சத்து 72 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி, முறைப்பாட்டாளரை 151,000 ரூபாயை வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும், மோசடி நடவடிக்கைகளுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
13 கோடி ரூபாய் சம்பாதிக்க ஆசையா டெலிகிராமில் அரங்கேறிய மோசடி இளைஞன் சிக்கியது எப்படி இணையவழி வணிகத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.டெலிகிராம் (Telegram) செயலி ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழி வணிகத்தின் மூலம் பெருந்தொகையான பணத்தைச் சம்பாதிக்க முடியும் என ஆசைவார்த்தை கூறி, 151,000 ரூபாயை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.இதன்போது, இணையவழி வணிக நடவடிக்கைகள் மூலம் 13 கோடியே 50 இலட்சத்து 72 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி, முறைப்பாட்டாளரை 151,000 ரூபாயை வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும், மோசடி நடவடிக்கைகளுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.