• Oct 21 2026

கோதுமை மாவைத் தொடர்ந்து உயர்ந்த உணவுப் பொருட்களின் விலைகள்!

Chithra / Oct 21st 2026, 12:04 pm
image


கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பராட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளையும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கோதுமை மாவின் விலை இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


சந்தை நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் கோதுமை மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.


இதன்படி, இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  சிற்றுண்டி வகைகளின் விலைகள் தலா 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கோதுமை மாவைத் தொடர்ந்து உயர்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பராட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளையும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கோதுமை மாவின் விலை இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.சந்தை நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் கோதுமை மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.இதன்படி, இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  சிற்றுண்டி வகைகளின் விலைகள் தலா 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement