• Aug 06 2025

சிங்கத்தை வீடியோ எடுத்த இளைஞர்; போராட்டத்தின் பின் உயிர் தப்பிய காட்சி!

shanuja / Aug 6th 2025, 1:57 pm
image

சிங்கத்தை வீடியோ எடுத்த இளைஞர், சிங்கத்தின் பார்வையில் அகப்பட்டு சில நிமிடங்களில் உயிர் தப்பிய காணொளி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று, தன்னுடைய இரையை மகிழ்ச்சியாக சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டிருந்தது. 


குறித்த காட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர், சிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை  பாரத்து அதனை வீடியோ எடுப்பதற்காக  சிங்கத்திற்கு அருகில் சென்றுள்ளார். 


சிங்கம் இரையை சாப்பிட்டு அமர்வதை, அந்த  இளைஞர்  மெல்ல மெல்ல  நடந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.


திடீரென அந்த இளைஞர் சிங்கத்தின் பார்வையில் அகப்பட்டார். இளைஞரைக் கண்ட அடுத்த நொடியில் சிங்கம் திடீரென கர்ஜித்துக் கொண்டு அவரை நோக்கிச் சென்றது. 


ஆனால் அந்த  இளைஞர் சிங்கத்தைக் கண்டு பயந்து ஓடாமல் ஒவ்வொரு அடியாக பின்வாங்கி வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்.


சில அடிகள் இளைஞரைத் தொடர்ந்து வந்த சிங்கம், திடீரென அப்படியே திரும்பிச் சென்றது.  இதனால் அந்த  இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். 


சிஙகத்தை வீடியோ எடுக்கச் சென்ற இளைஞரை சிங்கம் சீறிப்பாய முயற்சித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வீடியோவைப் பார்த்தவர்கள் பலர் ஒருவேளை சிங்கம் சீறிப் பாய்ந்திருந்தால்  இளைஞரின்  நிலை என்னாயிருக்கும்  என்று அச்சம் வெளியிட்டுள்ளனர். 


மேலும் இளைஞரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சிங்கத்தை வீடியோ எடுத்த இளைஞர்; போராட்டத்தின் பின் உயிர் தப்பிய காட்சி சிங்கத்தை வீடியோ எடுத்த இளைஞர், சிங்கத்தின் பார்வையில் அகப்பட்டு சில நிமிடங்களில் உயிர் தப்பிய காணொளி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று, தன்னுடைய இரையை மகிழ்ச்சியாக சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டிருந்தது. குறித்த காட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர், சிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை  பாரத்து அதனை வீடியோ எடுப்பதற்காக  சிங்கத்திற்கு அருகில் சென்றுள்ளார். சிங்கம் இரையை சாப்பிட்டு அமர்வதை, அந்த  இளைஞர்  மெல்ல மெல்ல  நடந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.திடீரென அந்த இளைஞர் சிங்கத்தின் பார்வையில் அகப்பட்டார். இளைஞரைக் கண்ட அடுத்த நொடியில் சிங்கம் திடீரென கர்ஜித்துக் கொண்டு அவரை நோக்கிச் சென்றது. ஆனால் அந்த  இளைஞர் சிங்கத்தைக் கண்டு பயந்து ஓடாமல் ஒவ்வொரு அடியாக பின்வாங்கி வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்.சில அடிகள் இளைஞரைத் தொடர்ந்து வந்த சிங்கம், திடீரென அப்படியே திரும்பிச் சென்றது.  இதனால் அந்த  இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். சிஙகத்தை வீடியோ எடுக்கச் சென்ற இளைஞரை சிங்கம் சீறிப்பாய முயற்சித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவைப் பார்த்தவர்கள் பலர் ஒருவேளை சிங்கம் சீறிப் பாய்ந்திருந்தால்  இளைஞரின்  நிலை என்னாயிருக்கும்  என்று அச்சம் வெளியிட்டுள்ளனர். மேலும் இளைஞரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement