• Sep 13 2026

24 வயது இளைஞரின் வயிற்றில் கருப்பை

Ziya / Sep 12th 2026, 3:29 pm
image

டெல்லியில் வசிக்கும் 24 வயது திருமணமான இளைஞர் ஒருவருக்குச் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதிக்குள் பெண் உறுப்புகளான கருப்பை (Uterus) மற்றும் பலோப்பியன் குழாய்கள் (Fallopian Tubes) இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், குறித்த இளைஞர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.


அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில், அவரது விந்து திரவத்தில் விந்தணுக்கள் முற்றிலும் இல்லை (Azoospermia) என்பது தெரியவந்தது.

 

தொடர்ந்து அவருக்குச் செய்யப்பட்ட விரிவான அல்ட்ராசவுண்ட் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளில், அவரது வயிற்றுப் பகுதியில் முழுமையான கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது அம்பலமானது.


விதைப்பையில் (Scrotum) இறங்கியிருக்க வேண்டிய இரண்டு விரைகளும் (Testicles) வயிற்றுப் பகுதியிலேயே தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.


இந்த அபூர்வ மருத்துவ நிலை ‘பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்’ (Persistent Mullerian Duct Syndrome - PMDS) என்று அழைக்கப்படுகிறது.


ஆணாகப் பிறந்த ஒருவருக்குக் கருவிலேயே அழிய வேண்டிய பெண் உறுப்புகளின் வளர்ச்சி அழியாமல் தொடர்வதே இதன் முதன்மைக் காரணமாகும்.


வயிற்றுக்குள் இருக்கும் விரைகளால் எதிர்காலத்தில் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தேவையான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



24 வயது இளைஞரின் வயிற்றில் கருப்பை டெல்லியில் வசிக்கும் 24 வயது திருமணமான இளைஞர் ஒருவருக்குச் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதிக்குள் பெண் உறுப்புகளான கருப்பை (Uterus) மற்றும் பலோப்பியன் குழாய்கள் (Fallopian Tubes) இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், குறித்த இளைஞர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில், அவரது விந்து திரவத்தில் விந்தணுக்கள் முற்றிலும் இல்லை (Azoospermia) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்குச் செய்யப்பட்ட விரிவான அல்ட்ராசவுண்ட் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளில், அவரது வயிற்றுப் பகுதியில் முழுமையான கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது அம்பலமானது.விதைப்பையில் (Scrotum) இறங்கியிருக்க வேண்டிய இரண்டு விரைகளும் (Testicles) வயிற்றுப் பகுதியிலேயே தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.இந்த அபூர்வ மருத்துவ நிலை ‘பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்’ (Persistent Mullerian Duct Syndrome - PMDS) என்று அழைக்கப்படுகிறது.ஆணாகப் பிறந்த ஒருவருக்குக் கருவிலேயே அழிய வேண்டிய பெண் உறுப்புகளின் வளர்ச்சி அழியாமல் தொடர்வதே இதன் முதன்மைக் காரணமாகும்.வயிற்றுக்குள் இருக்கும் விரைகளால் எதிர்காலத்தில் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தேவையான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement