திருகோணமலையில் பொலிஸ் கண்காணிப்பில் இருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு கூரான ஆயுதம் கிடைத்தது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை காண விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
48 மணித்தியால பொலிஸ் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களில் இருவர் தங்களது கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபர்களுக்கு கூரான ஆயுதம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் நேற்று (28) உத்தரவிட்டார்.
இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கழுத்தை அறுத்துக்கொண்ட இருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் காவலில் என்ன நடந்தது இருவர் கழுத்தை அறுத்த சம்பவத்தில் விசாரணை திருகோணமலையில் பொலிஸ் கண்காணிப்பில் இருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு கூரான ஆயுதம் கிடைத்தது எப்படி இந்தக் கேள்விக்கு விடை காண விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.48 மணித்தியால பொலிஸ் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களில் இருவர் தங்களது கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபர்களுக்கு கூரான ஆயுதம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் நேற்று (28) உத்தரவிட்டார்.இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கழுத்தை அறுத்துக்கொண்ட இருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.